மேலும் செய்திகள்
முதற்கிளை நுாலகத்தில் திருக்குறள் கருத்தரங்கம்
27-Dec-2024
கரூர், டிச. 27- ''வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை, ஒன்றிணைக்கும் சக்தி திருக்குறளையே சாரும்,'' என, ஸ்காட்லாந்து கெரியட்-வாட் பல்கலை கழக இணை பேராசிரியர் சுதாகர் பிச்சைமுத்து பேசினார்.கரூர் மாவட்ட மைய அலுவலகத்தில், பொது நுாலகத்துறை சார்பில், கன்னியாகுமாரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார். சிறப்பாளராக, கரூர் பரணி கல்விக்குழும முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியம் பங்கேற்றார்.ஸ்காட்லாந்து கெரியட்-வாட் பல்கலை கழக இணை பேராசிரியர் சுதாகர் பிச்சைமுத்து பேசியாதாவது:கரூர் மாவட்டத்தில், சிறிய கிராமத்தில் பிறந்த நான் இன்று உலக நாடுகளில் பல கல்வி நிறுவனங்களில் பணியாற்றி கொண்டிருப்பதற்கு உறுதுணையாக இருப்பது திருக்குறளேயாகும். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் சக்தி திருக்குறளையே சாரும். முக்காலத்தையும் உணர்த்துகின்ற ஒரே நுால் திருக்குறள். கல்வி, மேலாண்மை போன்ற அனைத்து துறைகளுக்குமான தகவல் திருக்குறளில் உள்ளது. இவ்வாறு பேசினார்.விழாவில் வாசகர் வட்டத் தலைவர் சங்கர், வாசகர் வட்ட நெறியாளர் ஈஸ்வரமூர்த்தி, இனாம் கரூர் கிளை நுாலகர் மோகனசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.
27-Dec-2024