மேலும் செய்திகள்
வைகாசி கடைசி வெள்ளி: கோவில்களில் சிறப்பு பூஜை
14-Jun-2025
சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில் திருமலாயி அம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடந்தது.-சேந்தமங்கலம் கிழக்கு தெருவில் திருமலாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழா, ஆண்டுதோறும் வைகாசி, ஆனி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா, கடந்த வாரம் முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து, நேற்று காலை, சோமேஷ்வரர் கோவிலில் இருந்து சக்தி அழைத்து, பூஜை கூடையை பம்பை வாத்தியத்-துடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கிழக்கு தெருவில் அமைந்துள்ள திருமலாயி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. மேலும், அங்காளபரமேஸ்வரி அம்மனின், இரண்டாம் படை வீடு என்றழைக்கப்-படும் பழையபாளையம் அங்காள பரமேஸ்வரி கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
14-Jun-2025