தோகைமலை யூனியன் சாதாரண கூட்டம்
குளித்தலை, டிச. 18-குளித்தலை அடுத்த, தோகைமலை யூனியன் சாதாரண கூட்டம் குழு தலைவர் சுகந்தி சசிகுமார் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பாப்பாத்தி, யூனியன் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் பாலசுப்பிரமணியன் தீர்மானங்களை வாசித்தார். இதில் வரவு செலவு உள்பட, 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பின், யூனியன் கவுன்சிலர் சின்னையன் பேசுகையில்,'புழுதேரி பஞ்.. வேலாயிபண்ணைக்களம் பகுதியில் இருந்து, சிறுவாட்டுப்பண்ணைக்களம் வரை செல்லும் தார் சாலையில் வடசேரி பெரிய ஏரியில் இருந்து புழுதேரி ஏரிக்கு வரும் மழை நீர், கடந்து செல்வதற்கு போதுமான பாலம் இல்லை. இதனால் சாலை அரிப்பு ஏற்பட்டு பழுதாகி வருகிறது. ஆகவே, மழைநீர் கடந்து செல்வதற்கு ஏதுவாக பாலங்கள் அமைக்க வேண்டும்' என்றார்யூனியன் கவுன்சிலர்கள் முருகேசன், முத்துக்கண்ணு, சுந்தரவள்ளி, சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.