உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வி.ஏ.ஓ.,வுக்கு மிரட்டல்; கடை உரிமையாளர் கைது

வி.ஏ.ஓ.,வுக்கு மிரட்டல்; கடை உரிமையாளர் கைது

குளித்தலை: குளித்தலை அடுத்த கீரனுார் கிராமத்தில், வி.ஏ.ஓ.,வாக இருப்பவர் பாலமுருகன், 43. அதே ஊரை சேர்ந்தவர் கருப்பன், 52. இவர், தான் கட்டி வரும் மளிகை கடைக்கு பட்டா கேட்டு, வி.ஏ.ஓ., பாலமுருகனிடம் விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பத்தை பரிசீலித்தபின், பட்டா வழங்குவதாக வி.ஏ.ஓ., தெரிவித்துள்ளார். ஆனால், உடனே பட்டா வழங்க வேண்டும் எனக்கேட்டு பணி செய்ய விடாமல் தடுத்து, காரை ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து வி.ஏ.ஓ., பாலமுருகன் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார், கருப்பனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ