உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மது பாட்டில்களை கடத்தி வந்த மூன்று பேர் கைது

மது பாட்டில்களை கடத்தி வந்த மூன்று பேர் கைது

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, சட்டவிரோதமாக மது பாட்டில்களை கடத்தி வந்த, மூன்று பேரை போலீசார் கைது செய்து, 102 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.புதுச்சேரியில் இருந்து, அரவக்குறிச்சி வழியாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு, மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக மதுவி-லக்கு இன்ஸ்பெக்டர் பாலகிருத்திகாவிற்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதியில் அரவக்குறிச்சி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அரவக்குறிச்சியில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலையில் சந்தேகத்திற்கிடமாக வந்த, மாருதி ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 8,602 ரூபாய் மதிப்புள்ள, 102 மது பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்-தது.இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம், கொட்டாநத்தம் கிராமம் கன்னிமார்பாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன், 37, ரமேஷ், 34, வடிவேல், 47, ஆகிய மூவரையும் அரவக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து, 102 மது பாட்-டில்களையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை