உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் மாஜி காதலியை கொலை செய்ய திட்டமிட்ட காதலன் உள்பட மூவர் கைது

கரூரில் மாஜி காதலியை கொலை செய்ய திட்டமிட்ட காதலன் உள்பட மூவர் கைது

கரூர்: சிவகங்கை மாவட்டம், சூசையார்பட்டினத்தை சேர்ந்தவர் சிவசங்கர், 24. இவர், திருச்சி மாவட்டம், வையம்பட்டியை சேர்ந்த, 19 வயது பெண்ணை, ஒருதலையாய் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த பெண் கரூர் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த வாலிபரை, சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இதனால் அந்த பெண்ணையும், அவருடைய கணவரையும் கொலை செய்ய, சிவசங்கர் திட்டமிட்டார்.அதற்காக, கரூர் அருகே தான்தோன்றிமலை சுங்க கேட் பகுதியில் உள்ள, தனியார் விடுதியில் கடந்த, 19ல், சிவசங்கர் அறை எடுத்து தங்கியுள்ளார். அவருக்கு துணையாக மதுரை செல்லுாரை சேர்ந்த ஆனந்த், 38, திண்டுக்கல்லை சேர்ந்த ஹரிஹரன், 20, ஆகியோரும் தங்கினர். சிவசங்கர் உள்ளிட்ட மூன்று பேரின் நடவடிக்கைகளில், சந்தேகமடைந்த தனியார் விடுதி மேலாளர் ஜெயகுமரேசன், 43, தான்தோன்றிமலை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் உள்ளிட்ட போலீசார், தனியார் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, சிவசங்கர் தங்கியிருந்த அறையில் இருந்து ஒரு வெட்டுக்கத்தி, ஒரு சூரிக்கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். பிறகு நடத்திய விசாரணையில், ஒரு தலையாய் காதலித்த பெண் மற்றும் அவரது கணவரை கொலை செய்ய, நண்பர்கள் இருவருடன் சிவசங்கர், விடுதியில் தங்கியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சிவசங்கர், அவரது நண்பர்கள் ஆனந்த், ஹரிஹரன் ஆகியோரை, தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து மாருதி வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை