உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கூரியர் வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய மூவரிடம் விசாரணை

கூரியர் வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய மூவரிடம் விசாரணை

குளித்தலை: குளித்தலை, தோகைமலை, அய்யர்மலை, கழுகூர், பஞ்சப்-பட்டி, நச்சலுார், கள்ளை உள்ளிட்ட கிராம பகுதிகளில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசியை சிலர் குறைந்த விலையில் வாங்கி, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல் பகுதிகளில் இயங்கி வரும் பெரிய அரிசி ஆலைகள் மற்றும் கோழி பண்ணை-களுக்கு கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். நேற்று மதியம், 2:00 மணியளவில் கூரியர் வாகனத்தில் ரேஷன் அரிசி மூட்டை-களை கடத்துவதாக வந்த தகவல்படி, குளித்தலை போலீசார் சுங்-ககேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ரேஷன் அரிசி கடத்தி சென்ற கூரியர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஒன்றரை டன் ரேஷன் அரிசியை, (40 மூட்டை) பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக திருச்சி மாவட்டம் காந்திநகர் விஜய், திருச்சி முத்தரசநல்லுார் சூரிய பிரகாஷ், திருச்சி செந்தண்ணீர்புரம் பிரசாந்த் ஆகிய மூன்று பேரை பிடித்து குளித்தலை போலீசார் விசாரித்து வருகின்றனர். கூரியர் வேன் பறிமுதல் செய்யப்பட்டு, போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தப்பட்டது. விசார-ணைக்கு பின், கரூர் உணவு பொருள் தடுப்பு காவல் துறை போலீ-சாரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை