உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / திருப்பூர் குமரன் பிறந்த நாள் விழா

திருப்பூர் குமரன் பிறந்த நாள் விழா

கரூர், சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பிறந்த நாள் விழா, கரூரில் நேற்று நடந்தது.அதில், கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள, திருப்பூர் குமரன் சிலைக்கு கரூர் மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள், வாரிசுகள் சங்கம் சார்பில், அமைப்பு செயலாளர் ஓம் சக்தி சேகர் தலைமையில், மாலை அணிவிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.அதேபோல், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு, கரூர் மாவட்ட செங்குந்தர் இளைஞர் பேரவை, செங்குந்தர் மகாஜன சங்கம் உள்ளிட்ட, பல்வேறு அமைப்புகள் சார்பில், திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது.* சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பிறந்த நாள் விழா, கரூரில் கொண்டாடப்பட்டது. கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள, திருப்பூர் குமரன் சிலைக்கு, பா.ஜ., ஓ.பி.சி., அணி சார்பில் மாநில செயலர் கோபிநாத், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில், மாநில ஓ.பி.சி., அணி சமூக ஊடக பொறுப்பாளர் கார்த்திகேயன், மாநில செயற்குழு உறுப்பினர் சிவசாமி, தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலர் சந்திரசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !