மேலும் செய்திகள்
இன்று இனிதாக: பெங்களூரு
10-Jun-2025
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி கிளை நுாலகத்தில், டி.என்.பி.எஸ்.சி., மாதிரி தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் ஆறு பேர் தேர்வு எழுதினர்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 போட்டி தேர்வுக்கான மாதிரி தேர்வுகள், கரூர் மாவட்டத்தில் பல்வேறு நுாலகங்களில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, அரவக்குறிச்சி கிளை நுாலகத்தில் மாதிரி தேர்வு நடந்தது. 8வது வாரமாக தொடர்ந்து நடைபெறும் மாதிரி தேர்வில், ஆறு பேர் தேர்வு எழுதினர். காலை, 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை தேர்வு நடந்தது. மதியம் 2:30 முதல் 5:30 மணி வரை வினாத்தாள் கலந்துரையாடல் நடைபெற்றது.
10-Jun-2025