உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காவல்காரன்பட்டி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு

காவல்காரன்பட்டி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு

குளித்தலை: குளித்தலை அடுத்த வடசேரி பஞ்., காவல்காரன்பட்டியில், தோகைமலை - திருச்சி நெடுஞ்சாலையில் நங்கவரம், பெருகமணி சாலையும், ஆலம்பட்டி புதுார், மணப்பாறை நெடுஞ்சாலை என பிரிந்து செல்கிறது. நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இச்சாலை வழியாக, தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், காவல்காரன்பட்டியில் உள்ள வங்கி, பள்ளி, கால்நடை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையம், வாரச்சந்தை, கோவில், கடை, வணிக வளாகம் என, பல்வேறு தேவைகளுக்காக, காவல்காரன்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் நாள்தோறும் சாலையில் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்வதோடு, பொதுமக்கள் கூட்டமும் அதிகரித்து காணப்படும். இந்நிலையில், காவல்காரன்பட்டியில் உள்ள திருச்சி - பாளையம், கரூர் முக்கிய சாலை, வடசேரி சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்து, கடைகள் அமைத்துள்ளனர். மேலும், கழிவுநீர் வடிகால் மீது கட்டடங்களை கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை