உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு:ஈரோடு மணிக்கூண்டு அருகே சாலையோரம், 30 ஆண்டு பழமையான பூவரச மரம் இருந்தது. தொடர் மழையால் வேர் பகுதியில் மண் அரிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை அடித்த லேசான காற்றை தாக்குப்பிடிக்க முடியாமல் வேருடன் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் ப.செ.பார்க்கில் இருந்து மணிக்கூண்டு வழியாக பஸ் ஸ்டாண்ட், கருங்கல்பாளையம், பள்ளிபாளையம் செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், ஒரு மணி நேரத்தில் மரத்தை முழுமையாக வெட்டி அகற்றினர். அதிர்ஷ்டவசமாக மரம் விழுந்தபோது, வாகனம் எதுவும் செல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை