உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி

ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை துறை சார்பில், ஆத்மா திட்டத்தின் கீழ், நவாமரத்துப்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு லாபகரமான பால் உற்பத்தி, செம்மறி ஆடு, வெள்ளாடு மற்றும் கோழி வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.அரவக்குறிச்சி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜா, விவசாயிகளுக்கு துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும், தொழில் நுட்பங்கள் வழங்கியும் பேசினார். குரும்பப்பட்டி கால்நடை மருத்துவர் கோகுல், பால் உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். கோட்டப்பட்டி கால்நடை மருத்துவர் மைதிலி, நாட்டுக்கோழி வளர்ப்பு, பராமரிப்பு முறைகள், அவைகளுக்கு வழங்கும் நோய் தடுப்பு முறைகள், குஞ்சு பராமரிப்பு குறித்து பேசினார்.மேலும் செம்மறி ஆடு, வெள்ளாடு வளர்ப்பு குறித்தும், அவைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி அளிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் செயல் விளக்கம் அளித்தார். 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். வட்டார தொழில் நுட்ப மேலாளர் சோனியா நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மதன், பிரபாகரன், உதவி வேளாண்மை அலுவலர் சக்திவேல் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி