உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மரக்கன்றுகள் பராமரிப்பு பணி மும்முரம்

மரக்கன்றுகள் பராமரிப்பு பணி மும்முரம்

கிருஷ்ணராயபுரம்:வரகூரில், மரக்கன்றுகளை பராமரிக்கும் பணிகளில், தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கருப்பத்துார் பஞ்சாயத்து வரகூரில் குழந்தைப்பட்டி சாலை, வரகூர் மாரியம்மன் கோவில் சாலை, அய்யர்மலை சாலையோர இடங்களில், பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தற்போது வெயில் காலம் என்பதால், மரக்கன்றுகளை பஞ்சாயத்தில் உள்ள நுாறு நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு, பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மரக்கன்றுகளை சுற்றி தடுப்பு வேலிகள் அமைப்பது, தண்ணீர் ஊற்றுவது, மரக்கன்றுகள் சுற்றி வளர்ந்துள்ள களைகளை அகற்றுவது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி