மேலும் செய்திகள்
மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் தொழிலாளர்கள்
12-Jul-2026
கிருஷ்ணராயபுரம்; கிருஷ்ணராயபுரம் அடுத்த மகாதானபுரம் பஞ்., மேட்டு மகாதானபுரம் பகுதியில் இருந்து பழைய-ஜெயங்கொண்டம் மலையாளி சுவாமி கோவில் செல்லும் தார்ச்சாலை இருபுறமும் பல்வேறு வகையான மரக்கன்றுகள் பஞ்., நிர்வாகம் சார்பில் நடப்பட்டுள்ளது.இதில், சாலையோர பகுதியில் நிழல் தரும் மரங்-களான வேம்பு, புங்கன், புளியமரம் உள்பட, 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்-ளன. இந்த மரக்கன்றுகளை, பஞ்.,ல் உள்ள நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் மூலம் பராமரித்து, குடங்களில் தண்ணீர் பிடித்து கொண்டு வந்து ஊற்றும் பணி நடந்தது. வெயில் காலம் என்-பதால் மரக்கன்றுகள் காய்ந்து விடமால் தடுக்கும் வகையில் நீர் ஊற்றும் பணி துரிதப்படுத்தப்பட்டது. பணிகளை பஞ்., நிர்வாகத்தினர் பார்வையிட்டனர்.
12-Jul-2026