உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / திருச்சி-பாலக்காடு ரயில் 6ல் ரத்து

திருச்சி-பாலக்காடு ரயில் 6ல் ரத்து

ஈரோடு, கரூர் - வீரராக்கியம் இடையிலான ரயில் பாதையில், பொறியியல் துறை சார்ந்த பராமரிப்பு பணி வரும், 6ல் நடக்கிறது. இதனால் ரயில் எண் - 16844 - பாலக்காடு டவுன் - திருச்சி எக்ஸ்பிரஸ் காலை, 6:30 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்படும். கரூர் ஸ்டேஷனுடன் நிறுத்தப்படும். கரூர் - திருச்சி இடையே பயணிக்காது. ரயில் எண் - 16843 - திருச்சி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சியில் மதியம், 1:00 மணிக்கு புறப்படும். இந்த ரயில் வரும், 6 அன்று மாயனுார் ஸ்டேஷனில் இருந்து பாலக்காடு டவுன் வரை வழக்கமான நேரத்தில் இயக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ