| ADDED : மார் 13, 2024 02:06 AM
குளித்தலை,:குளித்தலை
அடுத்த, பொய்யாமணி யூனியன் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள்
திறமைகள் தின விழா, பரிசளிப்பு விழா, மகளிர் தினம் என முப்பெரும் விழா
நடைபெற்றது.மாவட்ட பஞ்., குழு துணைத் தலைவர்
தேன்மொழிதியாகராஜன், கரூர் மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன்,
பள்ளி புரவலர் சுஜாதாகிருஷ்ணகுமார் ஆகியோர் பங்கேற்று, ஒவ்வொரு
வகுப்பிலும் முதல்வன் விருது பெற்ற மாணவர்களுக்கும், பள்ளியின்
சிறந்த மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட, 8ம் வகுப்பு மாணவி
சுவேதாவிற்கும் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.விழாவில் ஜவகர்
சிறுவர் மன்றத்தின் மூலம் கராத்தே, சிலம்பம், பரதநாட்டியம் ஆடி
மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவர்கள் வரைந்த
ஓவியத்தை கொண்டு, அமைக்கப்பட்ட ஓவிய கண்காட்சியை மாவட்ட கல்வி
அலுவலர் மணிவண்ணன் திறந்து வைத்தார். மேலும், 20 மாணவர்கள் பள்ளியில்
புதிதாக சேர்க்கும் விழாவும் நடந்தது.விழாவில் பொய்யாமணி பஞ்.,
தலைவர் பாலன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர்
சங்க தலைவர், உறுப்பினர்கள், பெற்றோர்கள், மக்கள் பிரதிநிதிகள்
கலந்து கொண்டனர்.