அமராவதி ஆற்றுப்பாலத்தில் எரியாத விளக்குகளால் அவதி
கரூர்: கரூர் - பசுபதிபாளையம் பகுதியை இணைக்கும் வகையில் கட்-டப்பட்டுள்ள பாலத்தில், இரவு நேரத்தில் மின் விளக்குகள் சரிவர எரியாமல் உள்ளது.கரூர் மற்றும் பசுபதிபாளையம் நகரங்களை இணைக்கும் வகையில், அமராவதி ஆற்றின் குறுக்கே ஐந்து சாலை பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம், கடந்த, ஆறு ஆண்டுகளுக்கு முன், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்-டது. அப்போது, பாலத்தின் இருபக்கமும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இரவு நேரத்தில் பாலத்தில் உள்ள அனைத்து மின் விளக்குகளும் எரிந்ததால், அமராவதி ஆறும் வெளிச்சத்தில் திளைத்தது.தற்போது, பாலத்தில் உள்ள பெரும்பா-லான மின் விளக்குகள் எரியாமல் பழுதடைந்துள்ளது. இதுகு-றித்து, அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தும், பயன் இல்லை என புலம்புகின்றனர்.இதனால், புதிய உயர் மட்ட பாலத்தில் உள்ள அனைத்து மின் விளக்குகளையும் எரிய வைக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவ-சியம்.