உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / எஸ்.ஐ.ஆர்.,யை கண்டித்து த.வெ.க., ஆர்ப்பாட்டம்

எஸ்.ஐ.ஆர்.,யை கண்டித்து த.வெ.க., ஆர்ப்பாட்டம்

கரூர்: கரூர் மாவட்ட த.வெ.க., சார்பில், மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கண்டித்தும், எஸ்.ஐ.ஆரில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், கிழக்கு மாவட்ட த.வெ.க., செயலாளர் பால-சுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ