கயிறு இழுக்கும் போட்டி 2 மாணவிக்கு நிதி உதவி
கரூர்: கயிறு இழுக்கும் போட்டிக்கு, இந்திய அணிக்கு தேர்வு பெற்ற அரசு பள்ளி மாணவி இருவருக்கு, கரூர் மாநகராட்சி கவுன்சிலர் ஸ்டீபன் பாபு நிதி உதவி வழங்கினார்.கரூர், ஆண்டாங்கோவில் அரசு பள்ளி மாணவி சிந்து, மின்னாம்-பள்ளி அரசு பள்ளி மாணவி நிவேதிதா ஆகியோர் கயிறு இழுக்கும் போட்டியில், தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மகாராஷ்டிராவில் நடக்கவுள்ள, தேசிய அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் கலந்து கொள்-கின்றனர். இவர்களுக்கான பயண செலவு மற்றும் பிற செலவு-களை வழங்கும் நிகழ்ச்சி கரூரில் நடந்தது. மாநகராட்சி கவுன்-சிலர் ஸ்டீபன் பாபு இவர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வழங்கி வெற்றி பெற வாழ்த்தி அனுப்பி வைத்தார்.