உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ.13.57 லட்சம் மோசடி இருவர் அதிரடி கைது

ரூ.13.57 லட்சம் மோசடி இருவர் அதிரடி கைது

ஈரோடு,: மொபைல் போன் டெலிகிராமில் அறிமுகமான நபர், ஆன்லைனில் பகுதி நேர வேலை செய்தால் அதிக வருவாய் பெறலாம் என்று கூறியதை நம்பி, அந்த நபரின் வங்கி கணக்கிற்கு, ரூ.13 லட்சத்து 57 ஆயிரத்து 946ஐ ஈரோட்டை சேர்ந்த நபர் அனுப்பி பகுதி நேர வேலை செய்தார். ஆனால் அந்த நபர் டெலிகிராம் ஐ.டி. கணக்கை முடித்து சென்று விட்டார். இதனால் பகுதி நேர வேலை செய்தும் பணம் கிடைக்கவில்லை என்று, ஈரோடு சைபர் க்ரைம் போலீசில் ஈரோட்டை சேர்ந்த நபர் புகார் செய்தார். ஈரோடு சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி, கோவை ரத்தினபுரி அண்ணா நகரை சேர்ந்த சஞ்சய், 23, கணபதி லட்சுமி புரம் சத்தி ரோட்டை சேர்ந்த ராம்குமார், 28, ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து இரண்டு மொபைல் போன், சிம்கார்டு, 25 வங்கி பாஸ் புத்தகம், 25 செக் புத்தகம் கைப்பற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ