மேலும் செய்திகள்
டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
26-Dec-2024
அரவக்குறிச்சி, ஜன. 2-வீட்டின் முன் நிறுத்தியிருந்த டூவீலர் திருடப்பட்ட வழக்கில், இருவர் கைது செய்யப்பட்டனர். அரவக்குறிச்சி அருகே, பள்ளப்பட்டி கிழக்கு தெரு பகுதியில் கடந்த, 11ம் தேதி பெரிய ஓடை தெரு பகுதியை சேர்ந்த அகமது மீரான், பூனை கண்ணன் தெருவை சேர்ந்த முஸ்தாக் ஆகியோர் தங்களது வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தியுள்ளனர். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, இரண்டு இருசக்கர வாகனங்கள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக அரவக்குறிச்சி போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பள்ளப்பட்டி கருத்தப்பா தெருவை சேர்ந்த சர்புதீன், 52, செல்லுக்காடு பகுதியை சேர்ந்த அல்தாப் உசேன், 24, ஆகியோர் இரண்டு இரு சக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் அரவக்குறிச்சி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
26-Dec-2024