உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சூதாடிய 2 பேர் கைது மூவர் தலைமறைவு

சூதாடிய 2 பேர் கைது மூவர் தலைமறைவு

குளித்தலை,: குளித்தலை அடுத்த வடசேரி, கோனார் நகர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக தோகைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்-போது, கோனார் நகர் அருகே உள்ள முட்புதரில் பணம் வைத்து சீட்டு விளையாடிக்கொண்டிருந்த, வடசேரியை சேர்ந்த மாரி-முத்து, 48, அழகர், 45, ஜனார்த்தன ராஜன், 40, தினேஷ், 38, சந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, இருவரை கைது செய்தனர். இதில், தலைமறைவான மூவரை, தோகைமலை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி