உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மீடியன் மீது பைக் மோதி இரு தொழிலாளர்கள் பலி

மீடியன் மீது பைக் மோதி இரு தொழிலாளர்கள் பலி

கரூர்:பீஹார் மாநிலம், மசூர் ஜாக் பகுதியைச் சேர்ந்தவர்கள் கோபி கிருஷ்ணன், 28, சந்தோஷ்குமார், 36. இருவரும் கரூரில் தங்கி கட்டட வேலை செய்து வந்தனர். இருவரும் 'ஹீரோ ஹங்க்' பைக்கில், கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கோடங்கிப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தனர். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை.பைக்கை, கோபி கிருஷ்ணன் ஓட்டினார். பைக் திடீரென நிலை தடுமாறி, மீடியனில் மோதியதில், முகத்தில் படுகாயமடைந்த கோபி கிருஷ்ணனும், சந்தோஷ்குமாரும், கரூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தனர். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி