உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டூவீலர்கள் மோதி விபத்து கணவன், மனைவி படுகாயம்

டூவீலர்கள் மோதி விபத்து கணவன், மனைவி படுகாயம்

அரவக்குறிச்சி: திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, நாமகிரி ஆர்.சி., தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ், 50; இவரது மனைவி ஜெனிவாமேரி, 51. இவர்கள் இருவரும், கரூர் - திண்டுக்கல் சாலையில், டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே, மணல்மேடு பஸ் ஸ்டாப் எதிரே சென்று-கொண்டிருந்தபோது, பின்னால் வந்த, அரவக்குறிச்சி அருகே, இனுங்கனுாரை சேர்ந்த விக்னேஷ், 20, என்பவர் ஓட்டிச் சென்ற மற்றொரு டூவீலர் மீது மோதியது.இதில், டூவீலரில் சென்ற கணவன், மனைவி இருவரும் படுகா-யமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அரவக்-குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ