உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குடும்ப பிரச்னை காரணமாக ஊழியர் விபரீத முடிவு

குடும்ப பிரச்னை காரணமாக ஊழியர் விபரீத முடிவு

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, காமராஜ் நகரை சேர்ந்தவர் சிவக்குமார், 55. இவர், அரவக்குறிச்சியில் உள்ள தனியார் மருந்து கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி செல்வி, 45. இவர்களது மகன் பவித்ரன், 24. சிவக்குமாரின் குடும்பத்தில் பிரச்னை இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சிவக்குமார், நேற்று முன்தினம் மதியம் தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார்.நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால், இவரது மனைவி, மகன் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை. இந்நிலையில், காட்டூர் வழிப்பாதை என்ற இடத்தில், தனது இரு சக்கர வாகனத்தின் அருகிலேயே, பெட்ரோல் ஊற்றி உடல் கருகிய நிலையில் சிவக்குமார் இறந்து கிடந்துள்ளார். அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜா சேர்வை, உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ