உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முத்திரை இல்லாத எடை இயந்திரங்கள் பறிமுதல்

முத்திரை இல்லாத எடை இயந்திரங்கள் பறிமுதல்

கரூர்:கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், இறைச்சி கடைகளில் எடை குறைவாக வழங்குவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் எழுந்தது.இதையடுத்து, நேற்று தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர் அகஸ்டின் உள்ளிட்ட அலுவலர்கள் தான்தோன்றிமலை, காந்தி கிராமம், சுங்ககேட் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் இறைச்சி கடைகளில் ஆய்வு செய்தனர்.அப்போது, 40க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகளில் முத்திரை இல்லாத எடை இயந்திரங்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, 20 எடை இயந்திரங்களை, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.அப்போது, ஒரு சில கடைகளை சேர்ந்த வியாபாரிகள், தொழிலாளர் நலத்துறை அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முத்திரை இல்லாத மற்றும் காலாவாதியான எடை இயந்திரங்களை கொண்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !