உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முனியப்பன் கோவிலில் வைகாசி திருவிழா

முனியப்பன் கோவிலில் வைகாசி திருவிழா

கரூர்: கரூர் மாவட்டம், நொய்யல் முனிநாதபுரம் முனியப்ப சுவாமி கோவில் திருவிழா, நேற்று முன்தினம் தொடங்கியது. பின், சேமங்கி காவிரியாற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து கொண்டு, கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். நேற்று கோவில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தனர். அதை தொடர்ந்து கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பின், மூலவர் முனியப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது. மூலவர் முனியப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை