உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து

கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து

மல்லசமுத்திரம்: சின்னதம்பிபாளையத்தில், மருந்து அடிக்கும் வேன் கவிழ்ந்ததில் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, 8 பேர் உயிர் தப்பினர்.மோகனுாரை சேர்ந்தவர் இல்பான், 30; இவர் நேற்று, திருச்செங்-கோடு அருகேயுள்ள நெய்க்காரப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜவேல், 50, என்பவரது விவசாய தோட்டத்தில் இருக்கும், மா மரங்களுக்கு மருந்து அடித்துவிட்டு மாலை 5:30 மணியளவில் டெம்போ வேனில், வேலை-யாட்கள், 8 பேருடன் மல்லசமுத்திரம் நோக்கி சென்றார்.அப்போது, சின்னதம்பிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்த-போது வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோ-ரத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் இல்பான் லேசான சிராய்ப்பு காயங்களுடன், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். வேனில் பயணம் செய்த 8 பேர் அதிர்ஷ்டவச-மாக எவ்வித காயங்களும் இன்றி உயிர் தப்பினர். இதுகுறித்து, மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை