மேலும் செய்திகள்
இரு வாலிபர்கள்மீது போக்சோவில் வழக்கு
04-Sep-2025
லாரியை வழிமறித்து கரும்பு ருசித்த யானை
06-Sep-2025
சத்தியமங்கலம், திம்பம் மலை பாதையில், கவிழ்ந்த பிக்கப் வேனால் -போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலை பாதை, 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்நிலையில் நேற்று மாலை, கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து, கரும்பு லோடு ஏற்றி கொண்டு பிக்கப் வேன் திம்பம் மலை பாதை வழியாக சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தது.ஒன்றாவது கொண்டை ஊசி வளைவில் வரும் போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். பிக்கப் வேன் கவிழ்ந்த விபத்தால் மலை பாதையில் வாகனங்கள் அணி வகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
04-Sep-2025
06-Sep-2025