உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் /  ரூ.3,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., சிக்கினார்

 ரூ.3,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., சிக்கினார்

குளித்தலை: கரூர் மாவட்டம், குளித்தலை அருகே, மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் சதீஷ், 36; கட்டட தொழிலாளி. இவரது தாய் வீரம்மாள், வயது முதிர்வால் இறந்துவிட்டார். இதையடுத்து, வாரிசு சான்றிதழ் பெற, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் அலுவலகத்தில் இ - -சேவை மையத்தில் விண்ணப்பித்துள்ளார். மகாதானபுரம் வடக்கு கிராம வி.ஏ.ஓ.,வாக, பிரபு, 46, என்பவர் உள்ளார். இவர், வாரிசு சான்றிதழுக்கு ஒப்புதல் அளிக்க, சதீஷிடம், 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சதீஷ், கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தார். நேற்று மதியம், 12:30 மணிக்கு, போலீசாரின் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய, 3,000 ரூபாயை, அலுவலகத்தில் இருந்த வி.ஏ.ஓ., பிரபுவிடம், சதீஷ் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த போலீசார், வி.ஏ.ஓ., பிரபுவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை