உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலையில் வி.சி., அலுவலகம் திறப்பு; திருமாவளவன் பங்கேற்பு

குளித்தலையில் வி.சி., அலுவலகம் திறப்பு; திருமாவளவன் பங்கேற்பு

குளித்தலை, குளித்தலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின், கரூர் கிழக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தை, நேற்று கட்சியின் தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார்.அப்போது அவர் பேசுகையில்,' ஜூன் 14ம் தேதி திருச்சியில் மதச்சார்பின்மை காப்போம் பேரணி நடைபெற உள்ளதாகவும், மத்திய அரசை கண்டித்து நடைபெறும் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள வேண்டும்' என்றார்.இதையடுத்து, கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., கோவக்குளத்தை சேர்ந்த மறைந்த நிர்வாகி ராம்குமார் உருவப்படத்திற்கு, மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின், காவல்காரன்பட்டி, பொய்யாமணி, வதியம் கிராமங்களில் கட்சி கொடியை திருமாவளவன் ஏற்றி வைத்தார். கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை