பாரத சாரண, சாரணியர் மண்டல போட்டி வெண்ணைமலை சேரன் பள்ளி முதலிடம்
கரூர், தமிழக பாரத சாரண, சாரணியர் மண்டல அளவிலான போட்டியில், கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாட்டில் உள்ள தனியார் பள்ளியில், தமிழக பாரத சாரணியர் சார்பில் கிழக்கு மண்டல திரளணி போட்டிகள், கடந்த மாதம், 30 முதல் கடந்த, 1 வரை நடந்தன. இதில், 31 கல்வி மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் மாணவர்கள் பங்கேற்றனர்.கலர் பார்ட்டி போட்டியில், 10ம் வகுப்பு மாணவர்கள் ஸ்டாலின், கிருத்திக்ராஜ், திலீப், பிளஸ் 1 மாணவர்கள் சபீர்பாஷா, மகிசுதன் ஆகியோர் மண்டல அளவில் முதல் இடம் பெற்றனர். பேண்ட் பார்ட்டி போட்டியில் மண்டல அளவில் கரூர் மாவட்ட சார்பில், இப்பள்ளியில் ஸ்டாலின், சபீர்பாஷா, மகிசுதன், திலீப், கிருத்திக்ராஜ், சீத்தாராம், ஹர்சித், பரத் ஆகியோர் இரண்டாம் இடம் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ரம்யா, காண்டீபன், முருகன், திவ்யா, பாண்டியன், பெரியசாமி ஆகியோரை பள்ளி செயலர் பாண்டியன், பள்ளி தாளாளர் பெரியசாமி, பள்ளி முதல்வர் பழனியப்பன் ஆகியோர் பாராட்டி கேடயம், பரிசு வழங்கினர்.