கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
கரூர்: தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் நாகமணிகண்டன் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தொழில்நுட்ப உபகரணங்கள், மதிப்பூதியம் இல்லாமல் உள்ள, டிஜிட்டல் கிராப் சர்வே பணியை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என, கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர் அழகிரிசாமி, மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், மாவட்ட செயலாளர் பிரபு, துணைத்தலைவர் சேதுபதி, பொருளாளர் செந்தில் குமார் உள்பட, பலர் பங்கேற்றனர்.