வே.பாளையம் ரவுண்டானாவில் ஊர்ப்பெயர் பலகை சேதம்
கரூர்: கரூர் மாவட்டம், புகழூரில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் செயல்படுகிறது. இதனால், வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து, லாரி டிரைவர்கள் புகழூர் காகித ஆலைக்கு வந்து செல்கின்றனர். இதையடுத்து, வாகன ஓட்டிகள் வசதிக்காக, காகித ஆலைக்கு செல்லும் வழியில், வேலாயுதம்பா-ளையம் மலைவீதி ரவுண்டானாவில், ஊர்ப்பெயர்கள் கொண்ட போர்டுகள் பல ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்டது. அந்த போர்டுகள், புகழூர் காகித ஆலைக்கு புதிதாக வரும், வாகன ஓட்-டிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது.மேலும், வேலாயுதம்பாளையம் ரவுண்டானாவில் இருந்து கோவை, திருச்சி, ஈரோடு, நாமக்கல், சேலம் பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், ஊர்ப்பெயர் கொண்ட போர்-டுகள் வழிகாட்டியாக உள்ளது. இந்நிலையில், ஊர்ப்பெயர்கள் கொண்ட போர்டுகள் சேதமடைந்துள்ளது. ஊர் பெயர்கள் போர்டில் அழிந்துள்ளது. இதனால், புதிதாக வரும் வாகன ஓட்-டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, வேலாயுதம்பாளையம் மலைவீதி ரவுண்டானாவில் வைக்கப்பட்டுள்ள ஊர்ப்பெயர் கொண்ட, போர்டுகளை மாற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.