உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரம் யூனியனில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி

கிருஷ்ணராயபுரம் யூனியனில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி

கிருஷ்ணராயபுரம், வீரராக்கியம் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மூலம் விண்ணப்ப படிவம் வழங்கும் பணி நேற்று நடந்தது.கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, கட்டளை வருவாய் கிராமங்களான வீரராக்கியம் பகுதியில், நேற்று காலை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், கிராமங்களில் வசிக்கும் மக்களிடம், வீடு, வீடாக சென்று விண்ணப்ப படிவம் வழங்கும் பணி நடந்தது.இந்த படிவத்தில் வாக்காளரின் பெயர், அடையாள அட்டை எண், உறவினர் பெயர், உறவு முறை, சட்டசபை தொகுதி எண், ஓட்டுச்சாவடி எண், முகவரி ஆகியவை கொண்ட படிவம் வாக்காளரிடம் தரப்பட்டது. இந்த படிவம் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி அலுவலரிடம் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இப்பணிகளில் வருவாய் ஆய்வாளர்கள் அங்கன்வாடி மைய பணியாளர்கள் உள்பட பலர் ஈடுபட்டனர்.* இதேபோல், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய கிராமங்களில் உள்ள பகுதிகளில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி மைய பணியாளர்கள் கொண்டு வீடு வீடாக வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி மூலம் விண்ணப்ப படிவம் வழங்கும் பணி நடந்தது. பணிகளை வருவாய்த்துறை நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை