வீரணம்பட்டியில் சுற்றித்திரிந்த புள்ளி மான் மீட்பு
கிருஷ்ணராயபுரம், வீரணம்பட்டி கிராமத்தில், சுற்றித்திரிந்த புள்ளிமானை பொதுமக்கள் மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைந்தனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்சாயத்து வீரணம்பட்டி கிராமத்தில், நேற்று காலை கடவூர் வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த புள்ளிமான், சுற்றி திரிந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள நாய்கள் புள்ளிமானை துரத்தி கடித்துள்ளன. நாய்களிடம் இருந்து தப்பிய மான், செல்வகுமார் வீட்டில் புகுந்தது. நாய்கள் துரத்தி புள்ளிமானுக்கு காயம் இருந்ததால் வனத்துறை மற்றும் முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி வனத்துறை அலுவலர்கள், முசிறி தீயணைப்பு நிலைய அலுவலர்கள், சம்பவ நடந்த இடத்திற்கு வந்து காயமடைந்த மானுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து, மீண்டும் வனத்தில் விடுவதற்கான பணிகள் நடந்தன.