மேலும் செய்திகள்
குடிநீர் குழாய் உடைப்பு வீணாக செல்லும் தண்ணீர்
22-Sep-2025
கரூர்: கரூர் அருகே, கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து, தண்ணீர் சாலையில் ஆறாக ஓடியது.கரூர் மாவட்டம், நெரூர், வாங்கல், கட்டளை காவிரியாற்று பகு-தியில் இருந்து, திண்டுக்கல் மாவட்டத்துக்கு, வெள்ளியணை வழி-யாக கூட்டு குடிநீர் திட்ட குழாய் செல்கிறது. இந்நிலையில், நேற்று வெள்ளியணை நான்கு சாலை சந்திப்பு பகுதியில், குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குழாய் உடைப்பு குறித்து, பொதுமக்கள் தமிழக குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, குடிநீர் வினியோகம் நிறுத்-தப்பட்டது.
22-Sep-2025