உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து 438 கன அடியாக அதிகரிப்பு

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து 438 கன அடியாக அதிகரிப்பு

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து 438 கன அடியாக அதிகரிப்புகரூர்:மாயனுார் கதவணைக்கு வரும், தண்ணீரின் அளவு நேற்று அதிகரித்துள்ளது.மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு, 1,000 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 438 கன அடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் முழுவதும், காவிரியாற்றில் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்றுமுன் தினம் வினாடிக்கு, 219 கன அடியாக தண்ணீர் வந்தது.* திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 10 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், குடிநீர் தேவைக்காக, அமராவதி ஆறு மற்றும் புதிய பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 51.02 அடியாக இருந்தது.* கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 10.13 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி