மேலும் செய்திகள்
அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்
26-Nov-2024
முடிச்சுட்டீங்க போங்க அட இருங்க boy Moment
22-Nov-2024
கரூர், நவ. 30-அமராவதி அணையில் இருந்து, புதிய பாசன வாய்க்காலில், நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.மழை காரணமாக, திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து ஆறு மற்றும் புதிய பாசன வாய்க்காலில் கடந்த, 26ல் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.இந்நிலையில், அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், நேற்று புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 342 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அமராவதி ஆற்றில், 54 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.அமராவதி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 1,640 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 675 கன அடியாக குறைந்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 88.19 அடியாக இருந்தது. மாயனுார் கதவணைகரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 2,556 கன அடி தண்ணீர் வந்தது. காவிரியாற்றில், சம்பா சாகுபடி பணிக்காக வினாடிக்கு, 1,956 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 600 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.ஆத்துப்பாளையம் அணைக.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 6 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 23.97 அடியாக இருந்தது.நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 50 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
26-Nov-2024
22-Nov-2024