உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலையில் துார் வாரும் பணியை நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

குளித்தலையில் துார் வாரும் பணியை நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

குளித்தலை ;நீர்வளத்துறை மூலம் 2025--26ம் ஆண்டு சிறப்பு துார்வாரும் திட்டத்தின் கீழ், கரூர் மாவட்டத்தில் உள்ள பாசன அமைப்புகளை துார்வாரும் பணி நடந்து வருகிறது.தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய பாசன அமைப்புகள் மற்றும் பாசன ஆதாரங்களை, 1,071 பணிகளாக, 6,179.60 கி.மீ., நீளத்திற்கு, ரூ.120 கோடி மதிப்பில் சிறப்பு துார்வாரும் திட்டத்தின் கீழ் துார்வார தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதில் கரூர் மாவட்டத்தில் உள்ள பாசன ஆதாரங்களை, துார்வாரும் வகையில் மொத்தம், 31 பணிகள், 131 கி.மீ., நீளத்திற்கு ரூ.5.71 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குளித்தலை அடுத்த கடவூர் யூனியன் வரவனை கிராமத்தில் உள்ள கருணாகுளம் ஏரியில் துவங்கி தென்னிலை, பண்ணப்பட்டி, வடவம்பாடி வழியாக பஞ்சப்பட்டி கிராமத்தில் உள்ள பஞ்சப்பட்டி நீர்தேக்கத்திற்கு செல்லும், 12.60 கி.மீ., நீளமுள்ள வாரியை, 5 தொகுப்புகளாக ரூ.1.13 கோடிக்கு துார்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை, தரமணி மாநில அணைகள் பாதுகாப்பு இயக்க கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார்.திருச்சி உதவி செயற்பொறியாளர் அரியாறு வடிநில உபகோட்டம் கார்த்திக்கேயன், குளித்தலை உதவி பொறியாளர்கள் சுகுமார், பணி ஆய்வாளர்கள், குளித்தலை மற்றும் பண்ணப்பட்டி கிராம விவசாயிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை