வாரச்சந்தை தேதி மாற்றம்
ப.வேலுார், ப.வேலுார், சுல்தான்பேட்டை வாரச்சந்தை, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கூடுகிறது. வரும், 30ல், சந்தை வளாகம் அருகே உள்ள காந்தி நகரில், தன்னாசியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடக்கிறது. அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், சுல்தான்பேட்டை வாரச்சந்தை, வரும், 28ல் வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் என, ப.வேலுார் டவுன் பஞ்., மற்றும் ஏல குத்தகைதாரர்கள் மூலம் தண்டோரா போட்டு மக்களுக்கும், வியாபாரிகளுக்கும், நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது.