உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரத்தில் பரவலாக பெய்த மழை

கிருஷ்ணராயபுரத்தில் பரவலாக பெய்த மழை

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்-திற்குட்பட்ட பல இடங்களில், கடந்த சில நாட்க-ளாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணராயபுரம் பகுதியில் 40 மி.மீ., மாயனுார், 16, பஞ்சப்பட்டி, 32, கடவூர், 12, பால-விடுதி, 4, மைலம்பட்டி, 12, கரூரில், 53.40, அர-வக்குறிச்சி, 28.60, க.பரமத்தி, 2 மி.மீ., குளித்-தலை, 4 மி.மீ., என, மொத்தம், 204.6 மி.மீ., மழை பதிவானது. மழை காரணமாக, கரூர் மாவட்-டத்தில் விவசாயிகள் விளை நிலங்களில் சாகு-படி செய்துள்ள மரவள்ளிக்கிழங்கு, வாழை, வெற்றிலை, முருங்கை, சோளப்பயிர் உள்ளிட்ட பயிர்களுக்கு மழைநீர் கிடைத்துள்ளது. தொடர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ