உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பிரசவத்தின் போது ரத்தப்போக்கு ஏற்பட்டதால் பெண் உயிரிழப்பு

பிரசவத்தின் போது ரத்தப்போக்கு ஏற்பட்டதால் பெண் உயிரிழப்பு

குளித்தலை: குளித்தலை அடுத்த வடசேரி பஞ்,, பூவாய்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகாமுனி, 31. திருச்சியில் உள்ள தனியார் பாலி-டெக்னிக் கல்லுாரியில், உடற்கல்வி இயக்குனராக வேலையில் இருந்து வருகிறார். இவர் இதே பகுதியை சேர்ந்த கோகிலா, 28, என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.கோகிலா கர்ப்பமானதுடன், காவல்காரன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 9ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதால், காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆலோசனைபடி, தோகைமலை மேம்படுத்-தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.ஆனால், கோகிலாவிற்கு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்-டதால், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோகிலா பரிதாப-மாக இறந்தார்.இதுகுறித்து அவரது கணவர் மகாமுனி கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ