உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலை அருகே மழை வேண்டி பெண்கள் 1,008 திருவிளக்கு பூஜை

குளித்தலை அருகே மழை வேண்டி பெண்கள் 1,008 திருவிளக்கு பூஜை

குளித்தலை, குளித்தலை அடுத்த, வெள்ளப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் சார்பாக மழை வேண்டி மஹாமாரியம்மன் கோவிலில், 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது.பருவமழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும். குடும்பங்களில் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இப்பகுதி மக்கள் எட்டு நாட்கள் விரதம் இருந்து வந்தனர். பூஜை பொருட்கள் விழா குழுவினரால் வழங்கப்பட்டு, மஹா மாரியம்மன் கோவில் முன்பாக பக்தர்களை அமர வைத்து பூஜை நடத்தினர். திருவிளக்கு பூஜையின் சிறப்பு அம்சமாக, 1,008 பெண்கள் விளக்கேற்றி, பல்வேறு வரங்கள் கேட்டு குங்குமம், துளசி, மலர், மஞ்சள், தானியம் போன்ற பொருட்களை துாவி பக்தியுடன் வழிபட்டனர்.பின்பு சிறப்பு அலங்காரம் செய்த மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின், பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ