உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி சாவு

வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி சாவு

குளித்தலை, குளித்தலை அருகே, வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி இறந்தார். குளித்தலை அடுத்த ராஜேந்திரம் பஞ்., கீழ தண்ணீர்பள்ளியை சேர்ந்த பிரகாஷ், 35, சென்ட்ரிங் கூலி தொழிலாளி. இவரது மனைவி பானு. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஓரு மகன் உள்ளனர்.நேற்று முன்தினம் மதியம் சென்ட்ரிங் வேலை முடித்து விட்டு, பெரியபாலம் தென்கரை பாசன வாய்க்காலில், நண்பர்கள் இருவருடன் குளித்து கொண்டிருந்தனர்.அப்போது, இருவர் மட்டும் குளித்து விட்டு கரை ஏறினர். பிரகாசை காணவில்லை என கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தினர் நீரில் இறங்கி தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.வாய்க்காலில் நீர்வரத்து அதிகம் காணப்பட்டதால், முசிறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள், 3 மணி நேரம் போராடி தண்ணீர்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் வாய்க்காலில் இறந்த பிரகாஷின் சடலம் மீட்கப்பட்டது. உடலை மீட்டு குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கிராம மக்கள், உறவினர்கள் சடலத்தை பார்த்து கதறி அழுதனர்.இது குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !