உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காகித ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

காகித ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

கரூர், கரூர் அருகே, காகித ஆலையில் மயங்கி விழுந்து ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி கீழ் ஒரத்தை பகுதியை சேர்ந்தவர் கண்ணன், 56; இவர் புகழூர் காகித ஆலையில், ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் கண்ணன், காகித ஆலையில் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது, கண்ணன் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வேனில் அழைத்து சென்று, சிகிச்சை அளித்தனர். பிறகு, மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, அழைத்து செல்லப்பட்ட போது உயிரிழந்தார்.இதுகுறித்து, கண்ணனின் மகன் சுரேஷ், 30, அளித்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ