உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குடி போதையில் தவறி விழுந்த தொழிலாளி பலி

குடி போதையில் தவறி விழுந்த தொழிலாளி பலி

கரூர்: கரூர் அருகே, குடி போதையில் தவறி கீழே விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், திருகாம்புலியூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து, 65, கூலி தொழிலாளி. இவர் கடந்த, 24ல், தான்தோன்றிமலை டாஸ்மாக் மதுபான கடை அருகே, குடி போதையில் தவறி விழுந்தார். அதில், படுகாயம் அடைந்த மாரிமுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து, மாரிமுத்துவின் மகள் நாக லட்சுமி, 38, கொடுத்த புகார்படி, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ