மேலும் செய்திகள்
அரசு பஸ் மோதி நடந்து சென்றவர் பலி
16-Nov-2024
குளித்தலை, டிச. 15-குளித்தலையில், அரசு விரைவு பஸ் மோதி தொழிலாளி இறந்தார்.குளித்தலை கலப்பு காலனியை சேர்ந்தவர் மணி, 60, சென்ட்ரிங் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 10:20 மணியளவில், பாரதிநகர் பகவதி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி கரகம் பாளித்துவிட்டு, கோவிலுக்கு வருவதற்காக கடம்பர் கோவில் பாலம் அருகே சாலையை கடக்க நின்றார்.அப்போது, திருச்சியில் இருந்து கோவை நோக்கி சென்ற, அரசு விரைவு பஸ் அதி வேகமாக வந்து, மணி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி இறந்தார்.இது குறித்து அவரது உறவினர் காந்தலட்சுமி, கொடுத்த புகார்படி அரசு பஸ் டிரைவர் லாலாபேட்டை முஸ்லிம் தெருவை சேர்ந்த முத்து கிருஷ்ணன், 57, என்பவர் மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
16-Nov-2024