உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லாரி மோதி தொழிலாளி பலி

லாரி மோதி தொழிலாளி பலி

குளித்தலை: குளித்தலை அடுத்த, மாயனுார் காசா காலனியை சேர்ந்தவர் சரோஜா. இவர் அரசு மருத்துவக் கல்லுாரியில் ஒப்பந்த பணியாள-ராக உள்ளார். இவரது கணவர் முத்துசாமி, 54, கூலி தொழிலாளி. நேற்று காலை மாயனுார் பெட்ரோல் பங்க் அருகே, முத்துசாமி ஸ்கூட்டி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திருச்-சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி முத்துசாமி பலியானார். அவரது உடல், கரூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. முத்துசாமி மனைவி சரோஜா, 50, கொடுத்த புகாரின்படி, லாரி ஓட்டுனர் ஜான் சுந்தர் மீது மாயனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை