உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வயலுாரில் தெரு விளக்கு பராமரிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்

வயலுாரில் தெரு விளக்கு பராமரிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்

கிருஷ்ணராயபுரம்: வயலுாரில், தெரு விளக்கு பராமரிப்பு பணிகளில் தொழிலா-ளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, வயலுார் பஞ்சாயத்து வார்டுகளுக்கு உட்பட்ட சரவணபுரம், கோடங்கிப்பட்டி, குழந்தைப்பட்டி, நடுப்-பட்டி, வயலுார் பகுதிகளில், தெரு விளக்குகள் பஞ்சாயத்து சார்பில் நிறுவப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு, காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால், மின் கம்பத்தில் இருந்த தெரு விளக்குகளில் பழுது ஏற்-பட்டது. இதனால் சாலைகள் இருளில் மூழ்கின.இந்நிலையில், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், பழைய தெரு விளக்குகளுக்கு பதிலாக புதிதாக மாற்றப்பட்டது. இப்பணியில், பஞ்சா-யத்து தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை